சிவகங்கை: மனுக்களை மாலையாக அணிந்து வந்த நபரால் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தைச் சேர்ந்த பாண்டி (58), "கலைஞர் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் வீடு கேட்டு முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அதிருப்தியடைந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து ஆட்சியரிடம் மீண்டும் மனு வழங்க முயன்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி