காவலாளியை கடுமையாக தாக்கி மிரட்டிய கும்பல்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (70). இவர், சிவகங்கை கவுரிப்பட்டி அருகே பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். அக். 1-ம் தேதி இரவு தோட்டத்துக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரிடம் பணம் கேட்டு மிரட்டி, அவரை கடுமையாக தாக்கி விட்டு தப்பிச் சென்றது. அப்பகுதி வழியாக வந்த கிராமத்தினர், காயமடைந்த ஆறு முகத்தை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்த னர்.

இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸார் விசாரித்தனர். இதில் காவலாளியை தாக்கியது நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த காட்டு பூச்சி (எ) ஆறுமுகம் (33), கவுரிப்பட்டியைச் சேர்ந்த விக்கி(21), கீரன்குளத்துப் பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (24), மதுரை மாவட்டம் மேல வளவைச் சேர்ந்த மருது பாண்டி (25) என்பது தெரியவந்தது. இதில் ஆறுமுகம், பிரகாஷ், மருதுபாண்டி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி