சிவகங்கை முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி, கூடுதல் மாவட்ட நீதிபதி பி. பாா்தசாரதி, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி என். செந்தில்முரளி, சாா்பு நீதிபதி ஆா். பாண்டி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி. ராதிகா, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபதா்ஷினி, குற்றவியல் நீதித் துறை நடுவா்கள் பி. செல்வம், இ. தங்கமணி, வழக்குரைஞா்கள் ஓ. ஜானகிராமன், பி. செந்தில்குமரன், டி. செந்தில்குமாா் ஆகியோா் வழக்குகளை விசாரித்தனா்.
குற்றவியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்பப் பிரச்னை வழக்குகள் என மொத்தம் 2, 773 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, 1, 866 வழக்குகள் சமரசமாகத் தீா்க்கப்பட்டன.
இதேபோல, வங்கிக் கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 441 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, 48 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மொத்தம் 1, 914 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ. 11 கோடியே 20 லட்சம் பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது.