சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் குமாரவேல், கீழக்கண்டனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முகேஷ் (19) என்பவர் சுமார் இரண்டரை அடி நீளமுள்ள வாளை வைத்துக் கொண்டு அப்பகுதியில் சென்றவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரிக்க முயன்றபோது, போலீசாரையும் வாளைக் காட்டி மிரட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்டார்.