முன்னதாக நின்ற நிலையில் அருள் பாலிக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து வெற்றிலை மாலை மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகளும் கற்பூர ஆராதனைகளும் காண்பிக்கப்பட்டன. பின்னர் சுவாமி சன்னதி முன்பு ஏராளமான பட்டாச்சாரியார்கள் ரோஜா இதழ்கள் கொண்டு ஏக தின லட்சார்ச்சனை மற்றும் அனுமந்த சகஸ்ரநாம அர்ச்சனை 12 முறை பூர்த்தியானதும் நிறைவாக பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா முதலிடம், நியூசிலாந்து முன்னேற்றம்