மானாமதுரை: காட்டுப் பன்றிகள் அட்டகாசம்; விவசாயிகள் வேதனை

மானாமதுரை அருகே காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஒக்கூர் பகுதியிலும் இதே நிலை நீடிப்பதாகக் கூறப்படுகிறது. இரவு நேரங்களில் கூட்டமாக வரும் பன்றிகளால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தவும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி