திறந்த வெளி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட விஸ்வநாதன் ஆனந்த்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் ₹24.30 கோடி செலவில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அருங்காட்சியகம் நேற்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது குடும்பத்துடன் வருகை தந்து அகழாய்வு தளத்தையும் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். அங்கு காட்சிப்படுத்தப்பட்ட மீன் உருவம் பொறித்த உறைகிணறு, சிவப்பு நிற கொள்கலன், செங்கல் கட்டுமானங்கள், உலைகலன் மற்றும் அகழாய்வு குழிகளை அவர் ஆர்வமாகக் கண்டார். செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த், “கீழடி அருங்காட்சியகம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதைவிட பழமையானது கீழடி தளம்,” என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி