ஆனால், இதற்கு அப்போதே ஊராட்சி நிர்வாகம் சார்பில் நிதி விடுவிக்க முடியாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின்னர் நிதி விடுவிக்கப்பட்டது. அந்த கோபுர மின்விளக்குகள் 2 ஆண்டுகள் மட்டுமே எரிந்தன. பின்னர் காலாவதியானதால் எரியவில்லை.
10 மின்விளக்குகள் வாங்க ரூ. 4.50 லட்சம் வரை தேவைப்பட்டது. ஆனால், ஊராட்சியில் நிதி இல்லையென்று கூறி புதிய மின்விளக்குகள் பொருத்தவில்லை. இதனால், அப்பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருளில் மூழ்கியுள்ளது.