சிவகங்கை: வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தேரடி திடல் பகுதியில் அமைந்துள்ள சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிகழ்வில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக) செந்தில் நாதன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் கோபி, பாசறை செயலாளர் பணக்கரை பிரபு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜாக்குலின் அலெக்சாண்டர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி