அவரது பேச்சில் முக்கியமான குற்றச்சாட்டுகள்: உதயநிதி ஸ்டாலின், உழைத்து அல்ல, ஸ்டாலின் நடவடிக்கையால் குறுக்குவழியில் துணை முதல்வரானதாக குற்றம்சாட்டினார். இப்படி பதவி பெற்றவரை மக்கள் ஏற்கமாட்டார்கள், புகழமாட்டார்கள் என்றும் கூறினார். திமுக அரசு நிறுத்திய திட்டங்கள், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் செயல்படுத்தப்படும் என உறுதி. "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டத்தை துவக்கியவர், இப்போது மக்களுக்கு பதிலாக குடும்பத்துடன் இருக்கிறார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால், சிறுமி முதல் வயதான பெண்கள் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை என கடும் விமர்சனம். போதைப்பொருள் மற்றும் விஷ சாராயம் தொடர்பான உளவுத்துறை தோல்வியை வலியுறுத்தினார். மருத்துவமனையில் நாடகம், மக்களை ஏமாற்றும் முதலமைச்சர், என கடுமையாக குற்றம்சாட்டினார்.
"ஸ்டாலின் கனவுலகில் மிதக்கிறார், ஆனால் 2026 தேர்தலில் அதிமுக 210 தொகுதிகளில் வெற்றி பெறும்" என நம்பிக்கை தெரிவித்தார். "பை பை ஸ்டாலின், பெயிலியர் மாடல் அரசு" என கேலி செய்தார் என்றார்.