திருப்புவனம் அருகே மின்னல் தாக்கி இரு பெண்கள் படுகாயம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வயல்சேரி கிராமத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த அமிர்தவள்ளி மற்றும் அன்பரசி ஆகிய இரு பெண்களை திடீரென பெய்த இடி மின்னலுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கியது. காயமடைந்த இருவரும் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பழையனூர் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி