முத்தனேந்தல் அருகே 2 டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

சிவகங்கை மாவட்டம் முத்தனேந்தல் அருகே இரு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில், தீயணைப்புத் துறையில் ஓய்வு பெற்ற நேரு (67) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு டூவீலரில் வந்த சுள்ளங்குடி ஊராட்சி செயலாளர் மகேந்திரன் (54) தலையில் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி