இளமனூரில் இரு சமூகத்தினர் மோதல்...போலீஸ் குவிப்பு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இளமனூரில் சமூக அடையாள பலகை அமைப்பை மையமாகக் கொண்டு இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் 3 பொதுமக்களும் 2 காவலர்களும் காயமடைந்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த எஸ். பி. சிவப்பிரசாத் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பலகை அகற்றக் கோரி இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகும் ஒரு தரப்பினர் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

தொடர்புடைய செய்தி