இந்நிலையில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்கு முன்னர் நீண்ட வரிசையில் கடந்த 3 நாட்களாக காத்திருக்கின்றன. நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் நெல் மூட்டைகளை இறக்க போதுமான லோடுமேன்கள் இல்லை என கூறப்படுகிறது.
இதனால் கூடுதல் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும், கூடுதல் சேமிப்பு கிடங்குகளை அமைக்க வேண்டும் என்றும், அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, நெல் மூட்டைகளை சேதமடையாமல் கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.