சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27வது வார்டு பகுதியில், 6 மாதங்களுக்கு முன்பு பழைய சாலையை அகற்றாமல் அதன் மீது புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியேற முடியாமல் மீண்டும் வீடுகளுக்குள்ளேயே தேங்கி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.