சிவகங்கை மாவட்டத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை முன்னிட்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்கள், கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பு, கணக்கெடுப்பு பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கான வழிமுறைகளை விளக்கும் நோக்கில் நடத்தப்பட்டது.