பசுமை மாரத்தான் போட்டி, ஆயிரக்கணக்கான மாணவர்கள், பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்ற பசுமை மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் பங்கேற்றனர். மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, ஹார்ட் புல்னெஸ் தியான அமைப்பு சார்பில் நாடு முழுவதும் 125 இடங்களில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி, பசுமையை வலியுறுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது. மானாமதுரையில் நடைபெற்ற போட்டியை நகராட்சி தலைவர் மாரியப்பன் கண்ணாடி துவக்கி வைத்தார். இதில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு 5 கிலோமீட்டர் தூரத்தை ஓடி கடந்தனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி