சிவகங்கை: மடப்புரம் காளி கோயில்களில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சாதாரண நாட்களிலேயே பக்தர்கள் ஏராளமானவர்கள் வருவது வழக்கம். இன்று ஆடி மூன்றாவது வெள்ளி என்பதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். 

நண்பகல் ஒரு மணி உச்சிக்கால பூஜையில் பங்கேற்க பக்தர்கள் காத்திருந்தனர். ஒரு மணிக்கு அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆடி வெள்ளியை முன்னிட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் தனியாக அழைத்துச் செல்லப்பட்டு அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி