திருப்புவனத்தில் அதிகபட்சமாக 116. 20 மில்லிமீட்டர் மழைப்பதிவு

கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெயிலுக்குப் பிறகு, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் தகவலின்படி, திருப்புவனம் பகுதியில் அதிகபட்சமாக 116.20 மிமீ மழை பதிவாகியுள்ளது. சிங்கம்புனரியில் 21.00 மிமீ மற்றும் சிவகங்கை நகரில் 9.50 மிமீ மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 146.70 மிமீ மழை பதிவாகியுள்ளது, சராசரியாக 16.30 மிமீ ஆகும். இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி