சிவகங்கை: அதிகபட்சமாக 183.30 மில்லி மீட்டர் மழைபதிவு

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று (மார்ச் 11) மழை பெய்ததால் பல்வேறு மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம், மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (மார்ச் 12) அதிகாலை முதல் கனமழை பெய்து வாங்கி வருகிறது. 

சிவகங்கையில் 20.00 மில்லி மீட்டரும் மானாமதுரையில் 10.10 மில்லி மீட்டரும் திருப்புவனத்தில் 9.20 மில்லி மீட்டரும் காரைக்குடியில் 33.00 மில்லி மீட்டரும் தேவகோட்டை 35.40 மில்லி மீட்டரும் காளையார்கோவில் 24.60 மில்லி மீட்டரும், சிங்கம்புணேரியில் 25.00 மில்லி மீட்டரும் இளையான்குடியில் 10.00 மில்லி மீட்டரும் மாவட்டத்தில் மொத்தமாக 183.30 மில்லி மீட்டரும் சராசரியாக 20.92 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி