திருப்புவனத்தில் விபத்தில் உயிரிழந்த கோயில் மாட்டின் வயிற்றில் பத்து கிலோவிற்கு மேல் பிளாஸ்டிக் பைகள் மற்றும் சிமெண்ட் சாக்குகள் இருந்த சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகள், சிமெண்ட் சாக்குகளை உணவு என நினைத்து உண்பதால் உடல்நலம் குன்றி உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.