சிவகங்கை: நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள செம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் புகலேஸ்வரன் மற்றும் நாகஜோதி தம்பதியினர். தற்போது புகலேஸ்வரன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் இரண்டாவது மகன் ராகுல் தர்ஷன், கடந்த ஆண்டு சிவகங்கை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்தார். 

தொடர்ந்து, மருத்துவக் கனவினை நினைவாக்க NEET தேர்விற்கான பயிற்சிக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிலையத்தில் கடந்த ஒரு ஆண்டாக பயின்று, சமீபத்தில் தேர்வை எழுதியிருந்தார். இந்நிலையில், இன்று NEET தேர்வு முடிவுகள் வரும் முன்னதாக காரியாபட்டி அருகே கரிசல்குளம் கிராமத்தில் உள்ள தனது பெரியப்பா, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசாமியின் வீட்டில், ராகுல் தர்ஷன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்த காரியாபட்டி போலீசார் உடலை கைப்பற்றி, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், ராகுலின் உடல் அவரது சொந்த ஊரான செம்பனூருக்கு கொண்டு வரப்பட்டு, இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்தி