மானாமதுரை: உலாவரும் தெரு நாய்கள்.. பொதுமக்கள் பீதி

மானாமதுரையில் 500க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மக்கள் கூடும் இடங்களில் நாய்கள் கூட்டமாக காணப்படுகின்றன. இதனால் பெண்கள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகளை துரத்துதல், குழந்தைகளை கடிப்பது, இரவு நேரங்களில் நாய்கள் சண்டையிட்டு அலறுவது போன்ற சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி