சிவகங்கை மாவட்டத்தில் மட்டும், 2,279 விவசாயிகள் ஆதார் எண்ணை வங்கியில் இணைக்காததும், 2,839 விவசாயிகள் e-KYC செய்யாததும் காரணமாக, தொகைகளை பெற முடியவில்லை. இதற்காக, உரிய விவரங்களை சீர்செய்து, தவணைகளை பெற முகாம்களில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், திட்டத்தின் பயனாளிகள் இறந்துவிட்டால், அவர்களது தகவல் வேளாண்மை துறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இறந்த பிறகும் தொகை பெற்றால், அந்த தொகை வாரிசுகளிடமிருந்து மீட்கப்படும். வாரிசுகள், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து திட்டத்தின் கீழ் பயனடையலாம். தற்போது விவசாயர்களுக்கான தனி அடையாள எண் வழங்கப்பட்டு வருகின்றது. எண்ணை உள்ள என மாவட்ட ஆட்சிதலைவர் ஆஷா அஜித் இன்று இரவு சுமார் 7 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ