சிவகங்கை அருகே, உறவுமுறையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய வழக்கில், கருப்புசாமி (26) என்பவருக்கு சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றம் 61 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.