சிவகங்கை: அரசு மருத்துவமனையில் காலாவதி மாத்திரை.. அதிர்ச்சி சம்பவம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக வந்த ஒரு இளைஞருக்கு காலாவதியான மாத்திரை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிளகனூரைச் சேர்ந்த சிவா பகத்சிங் என்பவர், கடந்த 11ஆம் தேதி வயிற்று வலி காரணமாக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவருக்கு சிகிச்சையளித்து மாத்திரை வழங்கப்பட்டது. அந்த மாத்திரையை வீட்டில் சென்று எடுத்தபின், அட்டையை பார்த்த போது, அது 2023 முதல் 2025 மே மாதம் வரை செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை பார்த்தபோது அவர் அதிர்ச்சியடைந்து, அதனை எடுத்த பிறகு வயிற்றுவலி மேலும் அதிகமானதாக கூறியுள்ளார். இதையடுத்து, அவர் இன்று மருந்து வழங்கும் பகுதிக்கு சென்று இந்த நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் மருந்து வழங்கிய நபர், "நான் இதை வழங்கவில்லை, இது எங்களிடம் கிடையாது," என மறுத்துள்ளார். இதனால் இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து மருத்துவ அலுவலர் அசாருதீனிடம் கேட்கப்பட்ட போது, "மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை," எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி