சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் மார்கழி அஷ்டமி திதியையொட்டி, அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகளுக்குப் பிறகு, ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். பின்னர், தனித்தனி சப்பரங்களில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீஆனந்தவல்லி, சோமநாதர், பிரியாவிடை ஆகியோர் நான்கு ரதவீதிகளில் திருவீதி உலா வந்தனர். இந்த நிகழ்வின்போது, பக்தர்கள் ஜீவராசிகளுக்கு உணவாக அரிசி, நவதானியங்களை வலம் வரும் பாதையில் தூவினர்.