சிவகங்கை: மாணவிக்கு பாலியல் தொல்லை.. கல்லூரி மாணவர் மீது போக்சோ

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி, பிப்ரவரி 2-ஆம் தேதி செம்பராயனேந்தல் வைகை ஆற்றுப் பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, சிவகங்கை கல்லூரியில் படிக்கும் சந்தோஷ் (20) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில், மானாமதுரை மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி