இதனை அடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நல குழுவினர் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததுடன் இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் புகார் அளிக்கவே 46 வயதுடைய ராமு, பழனி, 50 வயதான மணி, 38 வயதான சசிவர்ணம், 46 வயதான லெட்சுமணன், 66 வயதான முனியன், 72 வயதான மூக்கன் ஆகிய அந்த ஏழு நபர்களை பிடித்து அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதுடன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றவாளிகளை தாக்கியதில் அவர்கள் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.