இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்பட்டு மின்கட்டணம் செலுத்த வேண்டும். பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை தாமதமின்றி மின்கட்டணம் செலுத்துவது வழக்கம். மின்கட்டணத்தை காலக்கெடுவில் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும். மீண்டும் அபராதத்துடன் கட்டணம் செலுத்தி இணைப்பைப் பெற வேண்டும். அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை சரியான நேரத்தில் மின்கட்டணம் செலுத்துவதில்லை. பல வருடங்களாக நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை மின்வாரியம் வசூலிக்காமல் உள்ளது. திருப்புவனம் வட்டாரத்தில் 1,232 மின் இணைப்புகள் மூலம் இரண்டு கோடியே 21 லட்சத்து 2,429 ரூபாய் மின்கட்டண பாக்கி நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்கட்டணம் முறையாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெரியமலை நரசிம்மர் தரிசனம்: பக்தர்களுக்கு சிரமம்