கீழடியில் செல்பி பாயிண்ட், தொல்லியல் துறை நடவடிக்கை

கீழடியில், மத்திய, மாநில தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்த இடங்கள் 22 கோடி ரூபாய் செலவில் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை இம்மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்க உள்ளார். சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுக்க வசதியாக 'கீழடி நம் தாய்மடி' என்ற பெயரில் தென்னங்கன்றுடன் செல்பி பாயிண்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி