சிவகங்கை: ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

மதுரை ரயில்வே டிவிசன் சார்பில் மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு நகர்தல் மற்றும் பெட்டிகள் கவிழ்ந்தால் தேசிய பாதுகாப்பு படையினர், மருத்துவ குழுவினர், சிறப்பு காவல் துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் எவ்வாறு செயல்படுவார்கள் என்பது போன்ற மீட்புப் பணிகளை பயிற்சி செய்து காட்டினர். இந்த ஒத்திகை அசம்பாவிதங்களை எதிர்கொள்ள தயார்நிலையை உறுதி செய்தது.

தொடர்புடைய செய்தி