மானாமதுரை: சாலையில் கொட்டிய மணல்; அகற்றி சீரமைத்த பெண்கள்

மானாமதுரை அருகே பரமக்குடி–மானாமதுரை நெடுஞ்சாலையில், வாகன வேகத்தைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருந்த பேரிகாட் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற லாரிகளில் இருந்து மணல் சாலையில் பெருமளவில் தேங்கியது. பேரிகாட் அகற்றப்பட்டதும், சாலை முழுவதும் பரவிய மணலால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகினர். இதனால் அச்சமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தாமாக முன்வந்து சாலையில் தேங்கியிருந்த மணல்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

தொடர்புடைய செய்தி