சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயப் பணிகள் முடிந்ததை அடுத்து, கண்மாய்களில் பிடிக்கப்படும் கெளுத்தி மீன்கள் கிலோ ரூ. 700க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ராமேசுவரம், பாம்பன், மண்டபம் போன்ற கடற்கரை பகுதிகளிலும் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கண்மாய்களில் பிடிக்கப்படும் கெளுத்தி மற்றும் ஆற்றில் பிடிக்கப்படும் அயிரை மீன்களுக்கு மீன் பிரியர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.