சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தையில், சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கிடா ஆடுகள் மற்றும் சேவல்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த சந்தையை விட 10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டிகள் 13 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகியுள்ளன. சேவல்கள் 300 முதல் 450 ரூபாய் வரை விற்பனையாகின்றன. சிவராத்திரி அன்று நேர்த்திக்கடனுக்காக ஆடு, கோழி பலியிடும் வழக்கம் இருப்பதால், இந்த விலையேற்றம் காணப்பட்டாலும் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது.