ஆனால் பத்து நாட்கள் மட்டுமே சரளைக் கற்கள் பரப்பப்பட்டு, அதன்பின் மீண்டும் பணிகள் முற்றிலும் நின்றுவிட்டன. இதனால் தற்போது ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரமான வாகனங்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், ஆட்டோக்கள் மூலமாகவே போக்குவரத்து மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிகள் தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் பள்ளி செல்லும் போது கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையைக் கண்டித்து கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் அலட்சிய போக்கையே காரணமாகக் குற்றம் சாட்டுகின்றனர். பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்கி முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.