துபாயில் நடைபெற்ற உலக அளவிலான ட்ரோன் போட்டோகிராபர்களுக்கான போட்டியில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் சாந்தகுமார் மூன்றாம் இடம் பிடித்து 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசை வென்றுள்ளார். மேலும், உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ட்ரோன் மூலம் அழகிய காட்சிகளைப் படம்பிடித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க விரும்புவதாகவும், தன்னை போன்ற கலைஞர்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் எனவும் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.