புறக்காவல் காவல் நிலையக் திறக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் கீழடியில், செட்டிநாடு கட்டிடக் கலையில், ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புறக்காவல் காவல் நிலையக் கட்டிடம், ஒன்றரை ஆண்டாக தயாராக இருந்தும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. கீழடி அகழ்வைப்பகத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருவதால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் திருப்புவனம் போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்ட நிலையில், இங்கு நிரந்தர காவல் நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் கீழடி புறக்காவல் நிலையம் இக்கட்டிடத்தில் செயல்படத் தொடங்கும் என போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய முழுமையான காவல் நிலையம் கட்டப்படும் வரை, ஒரு சார்பு ஆய்வாளர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் இங்கு பணிபுரிவார்கள்.

தொடர்புடைய செய்தி