பேருந்து நிலையம் அமைந்தால், திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் மக்களுக்குப் பேருந்துகளில் ஏறிச் செல்லவும், இறங்கவும் வசதியாக இருக்கும். மேலும், கடைகளுக்குச் செல்வதற்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்வதற்கும், மருத்துவமனைக்குச் செல்வதற்கும் எளிதாக இருக்கும்.
எனவே, திருப்புவனம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையத்தை அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று மக்கள் ஆட்சியரக பகுதியில் கோரிக்கை வைத்துள்ளனர்.