லாடனேந்தல் கண்மாய் பகுதியில் உள்ள தென்னை மரங்கள், அகற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்தல் கிராமத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் ஒன்று அமைந்துள்ளது, இந்த கிராமத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 40 வருடங்களாக பட்டாயின்றி, இந்த கண்மாய்க்குள் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் சுமார் 7000 தென்னை மரங்களை விவசாயிகள் வளர்த்து வந்தனர் 40வருடங்களாக பொதுப்பணித்துறை நிர்வாகம் இதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்ட நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் கண்மாய் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர், ஆனால் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது, வழக்கு தொடர்ந்தவர்கள் மறுபடியும் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் 15 நாளுக்குள் மறுபடியும் அகற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது, இதன் அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள், திருப்புவனம் வட்டாட்சியர் காவல்துறையினர் உட்பட அனைவரும் சென்று சுமார் 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அகற்றினார்கள்.

தொடர்புடைய செய்தி