ஆதார் அப்டேட் செய்ய, நீண்டவரிசையில் நிற்கும் பொதுமக்கள்

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி உள்ளிட்ட 8 தாலுகாக்களில் ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையத்திலும் இருவர் பணிபுரிந்து, தலா 50 பேர்வரை பதிவு செய்ய வேண்டும் என்பது நடைமுறையாக இருந்தாலும், பெரும்பாலான மையங்களில் ஒரே ஒருவர் மட்டுமே இருப்பதால், பொதுமக்கள் தினசரி பதிவு செய்ய அலைக்கழிக்கப்படுகின்றனர். குறிப்பாக திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில், இருவர் பணிபுரிய வேண்டிய இடத்தில் ஒரே ஒருவர் மட்டுமே பணிபுரிவதால், தினசரி 50 நபர்களுக்கு மட்டுமே ஆதார் அப்டேட் செய்ய முடிகிறது. இதனால், அலுவலகம் திறக்கும் நேரத்துக்கு முன்பே மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. திருப்புவனம் தாலுகாவில் 45 ஊராட்சிகளுக்குட்பட்ட 173 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆதார் கார்டு திருத்தங்களுக்காக இந்த மையத்தையே நம்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி