மக்கள் தொடர்பு முகாமில், அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இம்மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.
எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் இன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.