சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழாயூர் காலனி பகுதியில் ஒரு மாத காலமாக மின்சாரம் துண்டிப்பு அதிக அளவில் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது மின்சாரம் இல்லை என்று இளையான்குடி மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் கலைந்து சென்றனர்.