மானாமதுரை: 18½ பவுன் தங்க நகைகள் மாயம்.. போலீசார் விசாரணை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேதியரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ரேவதி (35) என்பவர், தனது பெற்றோரின் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த 18½ பவுன் தங்க நகைகள் காணாமல் போனதாக மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மானாமதுரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகைகள் திருடு போனதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி