மானாமதுரை அருகே மதுரை–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முத்தனேந்தல் பேருந்து நிறுத்தம் பகுதியில், இன்று காலை மானாமதுரையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து, வேலூர் பகுதியைச் சேர்ந்த வீரமணி (50) என்பவர் சாலையை கடக்க முயன்றபோது அவர் மீது மோதியது. இந்த விபத்தில் வீரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மானாமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.