சிவகங்கை: குழாய் சேதம்.. வீணாகும் குடிநீர்

சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய குழாய்கள் பதிக்கப்படும்போது, பல இடங்களில் அழுத்தம் தாங்காமல் உடைந்து தண்ணீர் வீணாகிறது.  கடந்த இரண்டு நாட்களாக உடைந்துள்ள குழாய் வழியாக லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வைகை ஆற்றில் கலந்து வீணாகிறது. அதிகாரிகள் தற்காலிகமாக சரிசெய்தாலும், அழுத்தம் காரணமாக மீண்டும் உடைப்பு ஏற்படுகிறது.  சேதமடைந்த குழாய்களை உடனடியாக சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி