சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பேருந்து தாமதமாக வந்ததாலும், ஓட்டுநர் தாறுமாறாக பேருந்தை ஓட்டியதாலும் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக, குழந்தையுடன் ஏற முயன்ற பெண் தடுமாறியதாகக் கூறப்படுகிறது. ஓட்டுநர், 'ஓசியில் தானே வருகிறீர்கள், உங்கள் இஷ்டத்துக்கு எல்லாம் பேருந்தை ஓட்ட முடியாது' என பெண்களை அவமதித்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.