சிவகங்கை மாவட்டம் கீழராங்கியம் பகுதியில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கூறுகையில், "பழையனூர் அருகே உள்ள வளைவில் பேருந்தை திருப்புவதில் ஓட்டுநர் திணறினார். அப்போது நடத்துநர் உதவியாக இருந்து வண்டியை வளைத்து கொடுத்தார். அதன் பிறகும் ஓட்டுநர் சரியாக பேருந்தை இயக்கவில்லை. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டது" என குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.