சென்னையிலிருந்து 25 ஆண்டுகளாக இயங்கி வரும் "பல்லவன்" விரைவு ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்ட மாணவர்கள் கல்விக்கும், இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்கும் சென்னைக்கு செல்ல நேரடி ரயில் வசதி இல்லாததால் சிரமப்படுகின்றனர். இதனால் பயண நேரமும் செலவுகளும் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்டத்தின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக இந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.