சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் அவர்கள், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 9.13 லட்சம் ஒதுக்கி, கொட்டகுடி கீழ்பாத்தி ஊராட்சியில் புதிய நியாய விலை கடை கட்டித் தந்துள்ளார். இந்நிகழ்வில் அவர் நேரில் கலந்து கொண்டு, நியாயவிலைக் கடையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் மகேந்திரன், மானாமதுரை முன்னாள் எம்எல்ஏ நாகராஜன், பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.